- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிள் எடுத்த முயற்சியின் காரணமாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் முதியவர்கள் இந்திய நேரம் இரவு 9.45 மணிக்கு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
முத்துப்பேட்டையின் உண்மையான நிலவரம் இன்ஷா அல்லாஹ் விரைவில் நம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட இருக்கிறது.
அன்புடன் சகோதரன்
கீழை ஜமீல்
முத்துப்பேட்டையில் கலவரம் குறைந்தாலும் காவல்துறையின் கைது படலம் ஓயவில்லை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த சில நாட்களாக பதட்டம் நிலவி வருவது நாம் அறிந்ததே இந்நிலையில் இன்று காலை (2-2-2010) கலவரத்தில் ஈடுபட்டவர்களை ஒப்படைக்க கோரி காவல் துறை மூன்று மாணவர்களையும், மூன்று முதியவர்களையும் கைது செய்துள்ளது. இந்நிகழ்ச்சி முத்துப்பேட்டை பகுதியில் மிகுந்த பதட்டத்தை மீண்டும் ஏற்படுத்தியது.
இச்செய்தி தலைமையகத்தை எட்டியவுடன் மாநில துணைப் பொதுச் செயலாளர் சையது இக்பால், மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி, வேளச்சேரி சிராஜ், அமைந்தகரை கிளை செயலாளர் ஹபீப், ஆகியோர்கள் காவல் துறை இயக்குனகரத்தில் உள்ள உளவுத்துறை உயர்அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து அப்பாவி மாணவர்கள் மற்றும் வழக்கில் தொடர்பில்லாத முதியவர்களையும் விடுதலைச் செய்ய கோரிக்கை வைத்தனர்.
தொடர் நடவடிக்கையாக தமிழக முதல்வர், உள்துறை செயலாளர், முதன்மை செயலாளர், மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் காவல்துறை மற்றும் நீதித்துறைக்கும் அவசர தந்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அனுப்பப்பட்டது.
Telegram Sentence
Tiruvarur District Muthupettai Policemens have entered arrogantly Muslim houses in Muthupettai and used abuse words towards Muslim Womens, damaged the house hold articles like tv, windows, etc.
Innocent muslim youths and students have been arrested y muthupettai police. We kindly request you to release the innocent muslim youth and students have been arrested by muthupettai police. We kindly request you to release the innocent muslim youth and students.
- S.M. Syed Iqbal
Dy. Gen. Secretary
India Thowheed Jamaath
தந்தி வாசகம் தமிழில்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காவல்துறையினர் முலிம்களின் வீடுகளில் புகுந்து பெண்களிடம் தரக்குறைவாக பேசியும், வீடுகளிலுள்ள டி.வி. போன்ற பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். கலவரத்தில் சம்பந்தப்படாத அப்பாவிகளையும், மாணவர்களையும் விடுவிக்கவும்.
தந்தி அனுப்பப்ட்டவர்கள் கீழ்வருமாறு
1) C.M. Cell (2) Home Secretary (3) Cheif Secretary (4) S.P. Tiruvarur
(5) DIG Tanjore (6) I.G. Tirchy (7) DGP Chennai (8) SBSSB Chennai
(9) Magistrate Crime Thiruthuraipundi, (10) S.B. CID Chennai
(11) Thiruvarur SP Camp Office Muthupettai
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பிஜேபி சதி செய்து வருகிறது. தாக்கப்பட்டதாக வந்த வதந்தியை தொடர்ந்து முத்துப்பேட்டையில் கலவரம் தீ பரவும் அபாயம் உருவானது.
இதனை அறிந்த நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் ஸையது இக்பால் மற்றும் ஷிப்லி ஆகியோர் உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவின் குமார் பிரணவ் துணை கண்காணிப்பாளர் துரைராஜ் மற்றும் ஆகியோரை தொடர்பு கொண்டு நிலையை கட்டுக் கொண்டு வர கேட்டுக் கொண்டனர்.
அவர்கள் எடுத்த முயற்சியினை அடுத்து, காவல்துறை முத்துப் பேட்டை முழுவதும் குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேட்டை பகுதியில் அதிகமாக குவிக்கப்பட்டு கலவரம் வராமல் தடுக்கும் முயற்சியினை காவல்துறை எடுத்துள்ளது. கலவரத்தை உருவாக்க திட்டமிட்ட பிஜேபி குண்டர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.
இரவு என்றும் பாராமல் நம் மாநில நிர்வாகிகள் இக்பால், ஷிப்லி எடுத்த முயற்சிக்கு ஒரளவிற்கு நிம்மதி கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் : கீழை ஜமீல்.


