அல்லாஹ்வும் அவனது தூதரும் சிலாகித்து சொன்ன மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளை கடந்த ஒரு வருடமாக மிகச் சிறப்புடன் செய்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மிகச் சிரமத்திற்கு மத்தியில் தனது செயல்பாட்டை செய்து வருகிறது.
அதன் தலைமையக கட்டிடப்பணியினை தொடர பொருளதாரம் இன்றி சிரமப்படுவதை உணர்ந்த நல்ல உள்ளங்கள் பொருளாதாரங்களை வழங்கி வருகிறார்கள். சென்ற மாதம் ராஜகிரியை சேர்ந்த சகோதரி ஒருவர் தனது பதிமூன்றை பவுன் தங்க சங்கிலியை ஒன்றை ஜமாஅத்திற்கு தந்து மகிழ்ந்தார். அந்த சங்கிலி மாநிலச் செயலாளர் ஃபிர்தவ்ஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சங்கலியை வழங்கிய விபரத்தை சொன்ன நம் மாநில செயலாளர் தன் குடும்பத்தில் சொன்ன போது அவரின் மனைவியும் ஒரு தங்க பவுன் காதணியை ஜமாஅத்திற்கு வழங்கினார். எல்லா புகழும் அல்லாஹ்விற்கே !
அவ்வாறே, இந்த சகோதரியின் கணவர் ஒரு நடுநிலையான சம்பளம் வாங்கும் ராஜகிரியைச் சேர்ந்த சகோதரர் ஆவர் (இவர்களுக்கு மனவளர்ச்சி குன்றிய ஒரு மகன் உண்டு. அந்த சகோதரனுக்கு மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையிலும்) ஒண்றை இலட்சம் ரூபாய் வழங்கினார். துபையில் வீட்டு பணிச் செய்யும் செய்யும் இலங்கைச் சேர்ந்த சகோதரரி ஒருவர் 25 ஆயிரம் ரூபாய் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் கணவர் தன் சம்பாத்தியத்தில் செய்த இறைவழி தர்மத்திற்காக தானும் தனது சொத்திலிருந்து வழங்குவேன் என பிடிவாதமாக இந்தியாவில் லாக்கிரில் வைத்திருந்த பதிமூன்றை பவுன் நகையை (இன்றைய விலைக்கு ஒரு இலட்த்தி 56 ஆயிரம் ரூபாய்க்கான மதிப்பு) வழங்கினார். அல்லாஹ்வின் பாதையில் அள்ளி வழங்கிய அந்த குடும்பத்திற்காக அல்லாஹ் நல்லருள் புரியட்டும் என மாநில நிர்வாகிள் துஆச் செய்தனர்.


