INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

தர்பியா நிகழ்ச்சியா? தக்க வைக்கும் சூழ்ச்சியா?

வினாக்களும் விடைகளும் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனி நபர் தக்லீது ஜமாஅத்தின் தலைவர் விளக்கம் எனும் பெயரில் மீண்டும் நம்மீது பாய்ந்து பிராண்டியுள்ளார்.

எந்த அளவுக்கென்றால் தமுமுகவை விட நாம்தான் மிக மோசமானவர்கள், எதிர்க்க்ப்பட வேண்டியவர்கள் என பொருமித் தள்ளினார். அல்ஹம்துலில்லாஹ். இதை நாம் நம்முடைய வளர்ச்சிக்கு கிடைத்த வாழ்த்தாகவே கருதுகிறோம்.

மேலும் நாம் கிருஷ்ணசாமி, தேவநாதன் போன்றவர்களுடன் சேர்ந்து வழி கெட்டுப் போய் விட்டதாகக் கூறிய பொழுது, நமக்கு உண்மையிலேயே சிரிப்பு வந்தது. இதே கிருஷ்ணசாமியோடு கோவை கலவரத்தில் கை கோர்த்ததும், தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் தேவநாதனை மேடையேற்றிய போதும், அவரிடம் இலட்சக்கணக்கில் நிதி வாங்கிய போதும் இவருக்கு தெரியாதா? இவர் வழி கெடுக்க கூடியவர்கள் என்று. ஒருவேளை இப்போது உள்ள சகோதரர்களுக்கு இவர்களை பற்றி தெரியாது, அப்படியே கேட்டாலும் வாய் சாமர்த்தியத்தால் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியமா?

மேலும் திருமணப் பதிவுச் சட்டத்தை குறித்து கேட்டு மடக்கிய ஒருவரை சமாளிகக முடியாமல் ஹதீஸ் ஒன்றைக் கூறி வாயடைக்க முயற்சித்ததுதான் மிகப் பெரிய அவலம். கேள்வி கேட்டே வளர்த்த ஏகத்துவம், எந்த கேள்விக்கும் பதிலுண்டு என எதிர்த்துரைத்த ஏகத்துவம், இன்று கேள்வி கேட்டால் சட்டமாகிவிடும் என்ற ஹதீஸை சுட்டிக்காட்டி நழுவுவது கேலிக் கூத்தில்லையா? சட்டமாக்க நீ்ங்கள் இறைத் தூதரா? அல்லது கலைஞரிடம் கேள்வி கேட்க கூடாது, அவர் சட்டமாக்கி விடுவார் என்று கூறுகின்றீர்களா? சத்தியத்தை சொன்னப் போது சதிராடிய உங்கள் நாவுகள் இன்று தடுமாறுவதேன்?

எல்லாவற்றையும் விட டவுன் காஜி மேல் வீசிய அவதூறுதான் (ரெம்ப சூப்பர்) ஹைலைட். கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை ஆதரிக்க ஒரு முஃமீன் மீது மிகப் பெரிய அவதூறை சொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ?

டவுன் காஜி பத்தாயிரம் வாங்கிக் கொண்டு திருமணச் சான்றிதழை வழங்கியதாக சொல்கின்றீர்களே! பைசா செலவின்றி வாங்கிய சகோதரர்கள் கொதித்துப் போய் நம்மை தொடர்பு கொண்டனர்.    

நபிமார்கள் மீதும், நபித் தோழர்கள் மீதும் அவதூறுகளையும், பொய்களையும் இட்டுக் கட்டியவருக்கு டவுன் காஜி எம்மாத்திரம்?

-மங்கோலியன்

 

 

INTJ திரட்டி

Syndicate content