- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
மும்பையில் முஸ்லிம் எம்,எல்,ஏவை தாக்கிய நவ நிர்மாண் சேனா

மராட்டியத்தில் முதல் மந்திரி அசோக் சவான் தலைமையிலான காங்கிரஸ் & தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்று முன்தினம் பதவி ஏற்றுள்ளது.
இதையடுத்து மராட்டிய சட்டசபையின் 3 நாள் சிறப்புக்கூட்டம் நேற்று தொடங்கியது. சபை கூடியதும் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது சமாஜ்வாடிக் கட்சியின் மராட்டிய மாநிலத் தலைவரும், மான்கூர்டு சிவாஜி நகர் தொகுதியில் வெற்றி பெற்றவருமான அபூ ஆஸ்மி பதவி பிரமாணம் எடுப்பதற்காக மேடையில் ஏறினார். அவர் தனது தாய்மொழியான இந்தியில் பதவி பிரமாணம் எடுத்தார். எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மராத்தியில்தான் பதவி ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மராட்டிய நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்ததோடு 287 எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதமும் எழுதி இருந்தார். இந்த நிலையில், அபூ ஆஸ்மி இந்தியில் பதவி ஏற்றதால் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆவேசம் அடைந்தனர். மைக்கை பிடுங்கி வீசினர்.
இதனால் பதவிப்பிரமாண அறிக்கை கீழே விழுந்தது. உடனே ஆஸ்மி கீழே கிடந்த பதவிப்பிரமாண அறிக்கையை எடுத்து இந்தியில் மீண்டும் படிக்க ஆரம்பித்தார். இதனால் மராட்டிய நவ நிர்மான் சேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஆஸ்மி எம்.எல்.ஏ.வை நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்டனர். சிலர் பேனர்களை பிடித்தவாறு மராத்தி மொழிக்கு ஆதரவாக கோஷமிட்டனர். உடனே ஆஸ்மியை சபை காவலர்கள் வெளியே அழைத்து சென்றனர். ஆஸ்மிக்கு ஆதரவான 3வது அணி எம்.எல்.ஏ.க்கள் உடன் சென்றனர். இந்த சமயத்தில் அபு ஆஸ்மி தாக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு, தோள்பட்டை ஆகிய இடங்களில் அடி விழுந்தது.
பின்னர் சபை மீண்டும் கூடியது. அப்போது மராட்டிய நவ நிர்மாண் சேனா கட்சியினரின் செயலுக்கு தற்காலிக சபாநாயகர் கணபத்ராவ் தேஷ்முக், முதல்மந்திரி அசோக் சவான், எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் கட்சே, சிவசேனாவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் சுபாஷ் தேசாய் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட மராட்டிய நவ நிர்மாண் சேனா எம்.எல்.ஏ.க்கள் 4 பேரை சபையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு சஸ்பெண்டு செய்யக் கோரும் தீர்மானத்தை பாராளுமன்ற விவகார மந்திரி ஹர்ஷவர்த்தன் பாட்டீல் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் ஓட்டு மூலம் நிறைவேறப்பட்டது.
இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாகும். இந்த மொழியைமட்டுமன்றி இந்தியாவில் உள்ள எந்த மொழியையும் கற்பதற்கும், அந்த மொழியில் பேசுவதற்கும், அந்த மொழியில் எழுதுவதற்கும் இந்திய அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள்ளது. பதவி ஏற்பு விஷயத்தை பொறுத்தவரையில் இந்த மொழியில்தான் பதவி ஏற்கவேண்டும் என்று பாராளுமன்றம்- சட்டமன்றம் எதிலும் விதிமுறைகள் இல்லை. சமீபத்தில் பாராளுமன்ற பதவி ஏற்ப்பு நிகழ்ச்சியின் போது தமிழகத்து எம்.பி.க்களில் சிலர் தாய்மொழியாம் தமிழில் பதவி பிரமாணம் ஏற்றனர். அப்போது டெல்லியில் இந்திதான் தாய்மொழி.
எனவே இந்தியில்தான் பதவி ஏற்கவேண்டும் என்று இந்த ரவுடிக்கும்பல் போல் யாரும் சச்சரவு செய்யவில்லை. ஒரு மாநிலத்தில் அதுவும் சட்டமன்றத்தில் இன்ன மொழியில் தான் பதவி ஏற்கவேண்டும் என்று சட்டம் போட இந்த ராஜ்தாக்கரே யார்..? ஜனாதிபதியா..? இந்தியாவின் ஆட்சி மொழியில் அதுவும் தனது தாய்மொழியில் பதவியேற்றார் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை அதுவும் சட்டமியற்றும் அவையிலேயே தாக்கும் அளவுக்கு இந்த ராஜ்தாக்கரே ரவுடிக்கும்பலுக்கு எங்கிருந்து துணிவு வந்தது..? சட்டம் பல்வேறு காலகட்டங்களில் இவர்களுக்காக வளைந்து கொடுத்ததுதான் இவர்களுக்கு துணிவை தந்தது. இனவாதம்-மொழிவாதம் பேசி மராட்டியம் எதோ அந்நிய தேசம் என்பது போன்று தனியாட்சி நடத்தும் இந்த ராஜ்தாக்கரே வகையாறாக்கள் ஒடுக்கப்படவேண்டும்.
பல்வேறு காலகட்டங்களில் குறிப்பாக ரயில்வே பணிக்காக தேர்வுக்காக வந்த வடமாநிலத்தவர்களை அவர்களும் இந்தியர்கள் என்பதை மறந்து, அவர்கள் மராட்டியர்கள் அல்ல என்பதால் அவர்களை கொடூரமாக தாக்கியபோதே இந்த ராஜ்தாக்கரேயின் ரவுடிக்கட்சி தடை செய்யப்பட்டிருக்கவேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. ராஜ்தாக்கரே விதைத்த இனவாதமும்-மொழிவாதமும் இன்னும் வீரியமாக பரவி மக்களை அச்சுறுத்துவதற்கு முன்னால், ராஜ்தாக்கரே கைது செய்யப்பட்டு அவரது நவநிர்மான் கட்சியை தடை செய்யவேண்டும். சட்டம் தன் கடமையை செய்யுமா..? அல்லது 'சட்டாம்பிள்ளை'யிடம் சரணடையுமா என்பதை மக்கள் ஆவலுடன் கண்காணிக்கிறார்கள் என்பதை மத்திய-மாநில அரசுகள் உணரவேண்டும்.
-முகவை அப்பாஸ், குவைத்.


