INTJ

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

3,302

பிளஸ் 1 & 2 மாணவர்களுக்கும் கிரேடு முறையில் மதிப்பெண்

Swine Fluபத்தாம் வகுப்பை போல் பிளஸ் 2க்கும் கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த நடுவண் அரசு பரிசீலித்து வருகிறது.

அனைவருக்கும் கல்வி திட்டம் உட்பட பல்வேறு கல்வித் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க, அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தலைமை தாங்கினார்.

பின்னர், அவர் ”சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கிரேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. 'அசாதாரணம்' (ஏ1), 'திருப்தியில்லை' (இ2) என்பது உட்பட 9 அளவுகோளில் இந்த கிரேடு வழங்கப்படும். இதன் மூலம், மதிப்பீட்டில் ஆசிரியர்கள் தவறு செய்வது உள்ளிட்ட குறைபாடுகள் நீக்கப்படும். மாணவர்களுக்கும் தேர்வு அழுத்தம் குறையும்.

இதேபோல், பிளஸ் 2க்கும் கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டுள்ள கமிட்டி அறிக்கை கொடுத்ததும், மத்திய கல்வி ஆலோசனை கழகம், சி.பி.எஸ்.இ. போன்றவற்றுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.

உலக அளவிலான போட்டியை நமது மாணவர்களும் எதிர்கொள்ளும் வகையில் கல்வி திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இதற்கு ஏற்ப, அறிவியல், கணக்கு, இயற்பியல் உள்ளிட்ட பாடத் திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நாட்டின் 99 சதவீதம் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி கிடைத்துள்ளது. இருப்பினும், இதன் கல்வித் தரம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதற்கு தகுந்த அறிவை பெற்றவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 7 லட்சம் பேர் போதிய பயிற்சி பெற்றிருக்கவில்லை. 'கல்வி உரிமைச் சட்டம்' அமல்படுத்தப்பட்டால் ஆரம்ப பள்ளிகளுக்கு மேலும் 5 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்றார்.

நன்றி : தினகரன் நாளிதழ்.