INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

முத்துப் பேட்டையில் கலவரத்தை உருவாக்க நினைத்த பிஜேபியின் திட்டத்தை இதஜ முறியடித்தது!

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பிஜேபி சதி செய்து வருகிறது.

 வியாபார விஷயமாக நேற்று இரவு தாவூது என்ற சகோதரர் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் பேட்டை என்ற இடத்திற்கு சென்ற பொழுது அங்கு பிஜேபியைச் சேர்ந்த சிவா மற்றும் அவனது கூட்டாளிகளால் தாக்கப்பட்டார். அதையடுத்து, சிவாவின் டாடா சுமோ வாகனம் கல் எறிந்து தாக்கப்பட்டதாக வந்த வதந்தியை தொடர்ந்து முத்துப்பேட்டையில் கலவரம் தீ பரவும் அபாயம் உருவானது.

இதனை அறிந்த நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் ஸையது இக்பால் மற்றும் ஷிப்லி ஆகியோர் உடனடியாக மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் பிரவின் குமார் பிரணவ்  துணை கண்காணிப்பாளர் துரைராஜ் மற்றும்  ஆகியோரை தொடர்பு கொண்டு நிலையை கட்டுக் கொண்டு வர கேட்டுக் கொண்டனர்.

அவர்கள் எடுத்த முயற்சியினை அடுத்து, காவல்துறை முத்துப் பேட்டை முழுவதும் குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேட்டை பகுதியில் அதிகமாக குவிக்கப்பட்டு கலவரம் வராமல் தடுக்கும் முயற்சியினை காவல்துறை எடுத்துள்ளது. கலவரத்தை உருவாக்க திட்டமிட்ட பிஜேபி குண்டர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

இரவு என்றும் பாராமல் நம் மாநில நிர்வாகிகள் இக்பால், ஷிப்லி எடுத்த முயற்சிக்கு ஒரளவிற்கு நிம்மதி கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

தகவல் : கீழை ஜமீல்.

 

 

 

 

INTJ திரட்டி

Syndicate content