INTJ

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

3,295

கட்​டா​யத் திரு​ம​ணப் பதி​வுச் சட்​டத்​தால் முஸ்​லிம்​க​ளுக்கு சாத​கத்​தை​விட,​​ பாத​கமே அதி​கம் : தமிழ் மாநில ஜமா​அத்​துல் உலமா

கட்​டா​யத் திரு​ம​ணப் பதி​வுச் சட்​டத்​தால் முஸ்​லிம்​க​ளுக்கு சாத​கத்​தை​விட,​​ பாத​கமே அதி​கம் ஏற்​ப​டும் என்​றார் தமிழ் மாநில ஜமா​அத்​துல் உலமா மாநில துணைப் பொதுச் செய​லாளர் முஹம்​மது ஸுல்​தான் ரஸாதி.​ 
 
கரூர் மாவட்​டம்,​​ பள்​ள​பட்​டி​யில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்ற கட்​டா​யத் திரு​மண பதிவு விளக்​கப் பொதுக் கூட்​டத்​தில் பங்​கேற்ற அவர் அளித்த பேட்டி:​  'திரு​ம​ணம்,​​ ஜனாஸா என்ற 2 நிலை​க​ளில்​தான் முஸ்​லிம் சமு​தா​யம் கட்​டுக்​கோப்​பு​டன் உள்​ளது.​ இதற்​குப் பாத​கம் ஏற்​ப​டும் விதத்​தில்​தான்,​​ கட்​டா​யத் திரு​ம​ணப் பதி​வுச் சட்​டம் தமி​ழக அர​சால் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.​ 
 
3 முதல் 5 தலை​மு​றை​க​ளாக உள்ள முஸ்​லிம்​கள் திரு​ம​ணப் பதி​வேடு இன்​றும் பத்​தி​ர​மாக உள்​ளது.​ இந்த முறை வேறு எந்த மதத்​தி​லும் இல்லை.​ பல நூற்​றாண்டு கால​மா​கக் கட்​டுப்​பாட்​டைக் காத்து வரும் ஜமா​அத்​தை​யும்,​​ முஸ்​லிம்​க​ளின் ஒற்​று​மை​யை​யும் பாதிக்க கூடிய வகை​யில் அமைந்​துள்​ளது இந்​தப் புதிய சட்​டம்.​ 
 
திரு​ம​ணம்,​​ விவா​க​ரத்து,​​ சொத்​து​ரிமை ஆகிய மூன்​றை​யும் மத வழக்​கப்​படி செய்து கொள்​ள​லாம் எனச் சிறு​பான்மை மக்​க​ளுக்கு உரிமை கொடுக்​கப்​பட்​டி​ருந்​தது.​ இந்​தச் சட்​டத்​தால் முஸ்​லிம்​க​ளின் உரிமை பறிக்​கப்​ப​டு​கி​றது.​ 
 
கட்​சிப் பொறுப்​பு​கள் மற்​றும் பத​வி​யில் இருக்​கும் முஸ்​லிம் பொறுப்​பா​ளர்​கள்,​​ மக்​கள் பிர​தி​நி​தி​க​ளுக்கு ஷரீ​யத் சட்​டத்​தின் விளக்​கம் முழு​மை​யா​கத் தெரிந்​தி​ருக்க நியா​ய​மில்லை.​ இத​னால்,​​ அரசு கேட்​கும் மத ரீதி​யான கேள்​வி​க​ளுக்​குச் சரி​யான விளக்​கம் கூற முடி​யாத நிலை ஏற்​ப​ட​லாம்.​ ​ எனவே,​​ மதம் சார்ந்த முடி​வு​களை அரசு எடுப்​ப​தற்கு முன்​ன​தாக,​​ மார்க்க அறி​ஞர்​க​ளி​டம் விளக்​கம் கேட்​டி​ருக்க வேண்​டும்.​ ஆனால்,​​ அரசு தவ​றி​விட்​டது.​ 
 
பள்ளிவாசல்​க​ளில் திரு​ம​ணம் பதிவு செய்​யும் முறை 300 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக இருந்து வரு​கி​றது.​
 
உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​பைக் கொண்டு இந்​தச் சட்​டம் ஏற்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது.​ இந்​தி​யா​வில்,​​ ​ தமி​ழ​கத்​தில்​தான் முதன் முத​லாக அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​ புதிய சட்​டத்​தின்​படி முஸ்​லிம் பெரு​மக்​கள் சார் பதி​வா​ளர் அலு​வ​ல​கத்​தில்​தான் திரு​ம​ணம் செய்ய வேண்​டும் என்​றால்,​​ இங்​குள்ள பல்​வேறு பாமர மக்​க​ளுக்​குச் சிர​மம் ஏற்​ப​டும்.​ அத​னால்.​ இந்த சட்​டத்​தில் விதி​வி​லக்கு அளிக்க வேண்​டும்.​ மேலும்,​​ ​ குரா​னில் கூறி​யுள்ள சட்ட,​​ திட்​டக் கட்​டுப்​பா​டு​களை மீறும் விதத்​தில் இதன் விதி​மு​றை​கள் அமைந்​துள்​ளன.​ 
 
பொது சிவில் சட்​டத்​தைத் திணிக்​கும் வகை​யில்,​​ வெள்​ளோட்​டம் பார்க்க கொண்​டு​வ​ரப்​பட்ட முதல் சட்​ட​மா​கத்​தான் இது உள்​ளது.​ இச்​சட்​டம் நடை​மு​றைக்கு வந்​தால்,​​ முஸ்​லிம்​க​ளின் ஷரீ​யத் சட்​டம் கேள்​விக்​கு​றி​யா​கி​வி​டும்.​ ​
 
எனவே,​​ தற்​போது நடை​மு​றை​யில் இருந்து வரும் ஜமா​அத் மூலம் நடை​பெற்று வரும் திரு​ம​ணப் பதி​வுச் சட்​டத்தை அரசு ஏற்​றுக்​கொள்ள வேண்​டும்.​ இந்​தச் சட்​டம் தொடர வேண்​டும்.​ முஸ்​லிம்​க​ளுக்கு வேறு ஒரு புதிய திரு​ம​ணப் பதி​வுச் சட்​டம் தேவை​யில்லை.​ ​ சார் பதி​வா​ளர் நடத்​தி​ வைக்​கும் திரு​ம​ணங்​க​ளை​விட,​​ ஜமா​அத் மூலம் என்​ஓசி பெறப்​பட்டு நடத்​தப்​ப​டும் திரு​ம​ணமே உண்​மைத்​தன்மை உடை​ய​தாக இருக்​கும்.​ 
 
குறிப்​பாக,​​ முஸ்​லிம் மதப்​படி திரு​ம​ணங்​க​ளில் சில விதி​வி​லக்​கு​கள் அளிக்​கப்​பட்​டுள்​ளன.​ அதா​வது,​​ முஸ்​லிம் குடும்​பங்​க​ளில் உடன் பிறந்த சகோ​தரி மகன் அல்​லது மக​ளைத் திரு​ம​ணம் செய்து கொள்​ளக் கூடாது.​ ஆனால்,​​ மற்ற மதங்​க​ளில் இது நடை​மு​றை​யில் உள்​ளது.​ இச்​சட்​டம் நடை​மு​றைக்கு வந்​தால் இது போன்ற மார்க்க நெறி​மு​றை​களை மீறும் நிலை உரு​வா​கும்.​ 
 
எனவே,​​ இந்​தக் கட்​டாய திரு​ம​ணப் பதி​வுச் சட்​டத்தை தமி​ழக அரசு திரும்​பப் பெற வேண்​டும்.​ முஸ்​லிம்​க​ளுக்கு சாத​க​மான விதி​வி​லக்கு அளிக்​கும் வரை,​​ தமிழ்​நாட்​டில் உள்ள எந்த முஸ்​லிம் மக்​க​ளும் சார்​ப​தி​வா​ளர் அலு​வ​ல​கம் சென்று திரு​ம​ணப் பதிவு செய்​ய​மாட்​டார்​கள்.​ 
 
கட்​டா​யத் திரு​ம​ணப் பதி​வுச் ​ சட்​டத்​தால் ​ முஸ்​லிம்​க​ளுக்கு சாத​கத்​தை​விட,​​ பாத​கமே அதி​கம் ஏற்​ப​டும் என்​றார் அவர்.​​ ​ இந்த அமைப்​பின் மாவட்​டப் பொறுப்​பா​ளர் டி.எம்.ஏ.​ முபா​ரக்​ பாட்ஷா நிர்​வா​கி​கள் உட​னி​ருந்​த​னர்.
 
நன்றி  : தினமணி.