INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

அஜ்மானில் இஸ்லாமிய நிகழ்ச்சி

அல்லாஹ் அவனது தூதர் கண்ணியமிக்க இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் கொண்டு வந்த மார்க்கத்தை அதன் தூய்மை மாறாமல் எடுத்துச் சொல்வதற்காக கடந்த 2009 வருடம் ஜனவரி 16ஆம் தேதி இறையருளால் துவக்கப்பட்ட நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பற்பல பணிகளை சிறப்புடன் செய்து வருகிறது.

அதன் ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் கிளை சார்பாக நேற்று (27.01.2010) புதன் கிழமை இஸ்லாமிய பயான் நிகழ்ச்சி அஜ்மான் மண்டல தலைவர் ஸர்தார் ஹுஸைன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

 துபை மண்டலத் தலைவர் ஏ.எஸ்.இபுராஹீம் அவர்கள் மார்க்கம் சொல்வது என்ன? என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக உரையாற்றினார். அவர் தனது உரையில் மார்க்கம் சம்பந்தமாக சின்னஞ் சிறிய விஷயமாக இருந்தாலும் அதை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பிறகு அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் அவர்கள், அழைப்புப் பணியின் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியினை அஜ்மான் மண்டலச் செயலாளர் ஸுல்தான் மற்றும் இர்ஷாத், ஆரிஃபீன் உள்ளிட்ட சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்  ஹமீது ஹன்னான்.

 

 

 

 

 

INTJ திரட்டி

Syndicate content