- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் தற்போதைய தலைவர் கவிஞர் அப்துர் ரஹ்மான் தலைமையில் நேற்று (27.01.2010) நடைபெற்றது. கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் டி.என்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், சென்னை பிரசிடென்ட் ஹோட்டல் அதிபர் அபூபக்கர் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிய உறுப்பினர்களும் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-
1. ஜே.எம்.ஆரூண், எம்.பி.
2. எஸ்.ஏ.ஹெச். பஷீர் அஹ்மது (கீழக்கரை நகராட்சி தலைவர்)
3. எஸ்.கே.கே.ஹக்கீம் (பழனி நகராட்சி துணைத்தலைவர்)
4. என்.ஏ.சுலைமான் பாட்ஷா (அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர்)
5. அஸ்கர் அலி தலா (சென்னை அஞ்சுமான்-இ-ஹூசைனி தலைவர்)
6. பி.ஏ.காஜா மொய்னுதீன் (பேராசிரியர், நெல்லை மேலப்பாளையம் உஸ்மானியா அரபி கல்லூரி)
7. நவாப் ஜடா முகமது ஆசிஃப் அலி (ஆற்காடு இளவரசரின் மகன்)
8. ஹெச்.முஹம்மது அஃப்ஸல் (கவுரவ செயலாளர், தமிழ்நாடு ஹஜ் பணி சங்கம், சென்னை)
9. ஆரீஃப் (சென்னை பர்வீன் டிராவல்ஸ் இயக்குனர்)
10. அபூபக்கர் (சென்னை பிரசிடென்ட் ஓட்டல் உரிமையாளர்)
11. திருப்பூர் எம்.ஏ.ஸத்தார் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு மாநில காயிதே மில்லத் பேரவை)
12. கவிஞர் அப்துர் ரஹ்மான் (வக்பு வாரியத் தலைவர்)
ஹஜ் கமிட்டியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அபூபக்கர், தனக்கு இந்த பொறுப்பு வழங்கியுள்ள முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தார். மத்திய-மாநில அரசுகளின் உதவியுடன் ஹஜ் பயணிகளின் நலனுக்காக பாடுபடுவேன் என்றும் அவர் உறுதி அளித்தார் என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினரும் நிர்வாக அதிகாரியுமான கே.அலாவுதீன் தெரிவித்தார்.
தகவல் : கீழை ஜமீல்


