INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

இங்கிலாந்து குப்பைகளுக்கு இந்தியாவில் இடம்; கீழக்கரை மக்களின் குப்பைகளை இந்தியாவில் கொட்ட இடமில்லையோ..?

ங்கிலாந்திலிருந்து தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு, ஓராண்டிற்கு முன், 10 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில், "வேஸ்ட் பேப்பர்' இருப்பதாக, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரான்ஸ் நிறுவனம் மூலம், இதை இறக்குமதி செய்த சிவகாசி தனியார் கம்பெனி, அதை எடுத்து செல்லவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து நகராட்சி கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. கன்டெய்னர்களை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். கன்டெய்னர்களுக்குள், குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், வேஸ்ட் பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், ரப்பர் கையுறைகள், புழுவுடன் கூடிய நகராட்சி கழிவுகள் உள்ளிட்டவை இருந்தன. இவற்றின் மொத்த எடை, 260 டன். இந்தியாவில் இறக்குமதி செய்ய, தடைவிதிக்கப்பட்டுள்ள இக்கழிவுகள் அடங்கிய கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து இதுபோன்ற இறக்குமதிகள் அவ்வப்போது நடைபெறுவதும், அவை பறிமுதல் செய்யப்படும்போது மட்டும் செய்தியாவதும் தொடர்கிறது. வெளிநாடுகளிலிருந்து இத்தகைய மோசமான கழிவுகள் தனி நபர்களால் இறக்குமதி செய்யப்பட்டு அவைகளை இயன்றவரை பணமாக்கி விட்டு மீதி குப்பைகளை தமிழகத்தின் ஏதேனும் ஓரிடத்தில் கொட்டுகின்றனர். இப்படி வெளிநாட்டு குப்பைகளை கொட்டுவதற்கு இடமுள்ள தமிழகத்தில், பழம்பெரும்  ஊரான கீழக்கரை மக்களின் குப்பைகளை கொட்ட மட்டும் அரசு நிர்வாகத்திற்கு இடம் கிடைக்கவில்லை என்பது அதிசயமே.

கீழக்கரை நகரசபையில் சேரும் குப்பைகள் தில்லையேந்தல் பகுதி அருகே கொட்டப்பட்டு வந்தது.

இதற்கு அந்த பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடைஉத்தரவு பெற்றுள்ளனர். இதன் காரணமாக கீழக்கரை தனியார் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக குப்பைகள் கொட்டப்பட்டது. இதற்கு கும்பிடுமதுரை பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து கீழக்கரை நகரசபை தலைவர் பசீர் அகமது தலைமையில் அனைத்துகட்சி பிரமுகர்கள் கலெக்டர் அருண்ராயை சந்தித்து முறையிட்டதையடுத்து, கும்பிடு மதுரை பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் குப்பைகளை கொட்டப்படுகிறது. எனினும் கும்பிடு மதுரை மக்களின்  எதிர்ப்பும் தொடர்கிறது.

குடிமக்கள் மீதான ஒரு அரசின் தலையாய கடமை என்பது அம்மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு உறுதியளிப்பதாகும். ஆனால் ஒரு பாராம்பரியமிக்க ஊரை குப்பை மேடாக காட்சியளிக்க செய்வதும், மக்கள் எதிர்ப்பு கிளம்பினால் தற்காலிகமாக தீர்வு காண்பதும் அரசுக்கு அழகல்ல. எனவே கீழக்கரையின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதே நேரத்தில் சுற்றுப்புற கிராம மக்களும் பாதிக்காத  வகையில் சுற்றுப்புற கிராம மக்கள் உள்ளடக்கிய ஆய்வுக்கூட்டத்தை அரசு ஏற்பாடு செய்து கீழக்கரை குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் குப்பைகளை சாலை  ஓரங்களில் கொட்டி அவைகளுக்கு தீ வைப்பதன் மூலம் காற்றை மாசுபடுத்துவதோடு, போக்குவரத்திற்கு இடையூறையும், மக்களுக்கு நோயையும் ஏற்படுத்துவதை தவிர்க்க, வெளிநாடுகள் போல், குடியிருப்புகளுக்கு வெகு தூரத்தில்  குப்பைகளை ஓரிடத்தில் கொட்டி அதை மண்ணைப் போட்டு மூடுவதன் மூலம் சுகாதாரத்தை பேணும் திட்டத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

-முகவை அப்பாஸ்.

INTJ திரட்டி

Syndicate content