கீழக்கரையில் அடாவடிதனம் செய்து வந்த துணை ஆய்வாளர் ஜெயதேவியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளை கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் அருகிலுள்ள செந்துரை என்ற குக்கிராமத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
சமீபத்தில் முறையாக தலாக் பெற பெற்ற ஒருவர் மறுமணம் முடித்துள்ளார். அவர் திருமணம் முடித்ததை விரும்பாத முதல் மனைவி வீட்டினர் கொடுத்த பொய் புகாரின் பெயரில் அச்சகோதரரை ஒரு நாள் முழுவதும் காவல்நிலையத்தில் வைத்து ஜெயதேவி மிரட்டி 11 இலட்சம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்தை அடுத்து 5 இலட்சமும், அடுத்து 3 இலட்சமும் கேட்டுள்ளார். கேட்ட பணம் தரவில்லை என்றால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டியுள்ளார். அம்மிரட்டலுக்கு பணியாத அந்த இளைஞர் நான் முறையாக தலாக் பெற்று, முறையாகதான் இரண்டாம் திருமணமும் முடித்துள்ளேன்.
வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள். நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என பிடிவாதமாக இருந்ததை அடுத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு, 5 நாள் சிறைவாசத்திற்கு பிறகு பிணையில் வந்தார். இதுகுறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். அவரின் நியாயமான கோரிக்கைகளை இதஜ மாநிலச் செயலாளர் ஃபிர்தவ்ஸ், இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார், மற்றும் கீழக்கரை நிர்வாகிகள் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து விளக்கம் கொடுத்தனர்.
இஸ்லாமிய ஷரீஅத் பிரகாரம் முறையாக தலாக் பெற்று, மறுமணம் முடித்தவர் மீது காழ்புணர்வின் காரணமாக வழக்கு பதிவு செய்து ஷரீஅத் சட்டத்தை அவமதிப்பு செய்து விட்டதாக ஜெயதேவி மீது குற்றம் சுமத்தினார். அதை கேட்டறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடி நடவடிக்கை எடுத்தார். அதன்படி அவர் கீழக்கரையிலிருந்து மாற்றப்பட்டார்.


