INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 11,589
  • Visitors:
  • Today: 35
    This week: 175

நலவாழ்வுச் செய்திகள்

மழைக்கால நோய்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் வாந்தி, வயிற்றுப்-போக்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களிலிருந்து பொதுமக்கள் தப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:

* குடிநீரை வடிகட்டி, கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும்.

* உணவு உண்ணும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பின்பும் கைகளை சோப்பினால் நன்கு கழுவ வேண்டும்.

* குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் தேங்கிய நீரை பம்புகளிலிருந்து அடித்தெடுத்து பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.

* வெளி இடங்களில் மலஜலம் கழிப்பதைத் தவிர்த்து, கழிவறைகளை பயன்படுத்த வேண்டும்.

* சாலையோர ஈ மொய்த்த பண்டங்களை உண்ணக் கூடாது.

* வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உப்பு, சர்க்கரை கரைசலை அருந்தலாம்.

* பாதிப்பு அதிகமாக இருந்தால் அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.

* மேலும் உதவிக்கு 1913, 2591 2686, 2591 2687 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பேட்டரி உதவியுடன் இயங்கும் செயற்கை சிறுநீரகம் கல்லூரி மாணவர் சாதனை!

சிறுநீரகங்கள் செயலிழப்பதால் பாதிக்கப்படும் நோயாளிகளின் உயிரைக் காக்க உதவும் செயற்கை சிறுநீரகத்தை கண்டுபிடித்து மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளார் பெங்களூரு பொறியியல் கல்லூரி மாணவர். பெங்களூரு ஞானபாரதி-யில் உள்ள டாக்டர் அம்பேத்கர் இன்ஸ்டி-டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் மருத்துவ மின்னணு பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ள அவரது பெயர் புதாதித்யா சட்டோபாத்யாய (24); கோல்கத்தா-வைச் சேர்ந்தவர். உலகில் சிறுநீரக செயல் இழப்பால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு புத்துயிர் ஊட்டியுள்ள இந்த கண்டுபிடிப்பு குறித்து புதாதித்யா அளித்த விவரம்:
நமது உடல் இயல்பாக செயல்பட சிறுநீரகம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் தண்ணீர், உப்பின் அளவை முறையாக பராமரிப்பது, ரத்தத்தை சுத்தப்படுத்துவது, கழிவுப் பொருள்களை வெளியேற்றுவது போன்ற பணிகளை இரண்டு சிறுநீரகங்களும் செய்கின்றன. ஒரு சிறுநீரகம் பாதிக்கப்-பட்டு சரியாக செயல்படாமல் போனால் மற்றொரு சிறுநீரகம் மூலம் உயிர் வாழலாம். இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டால் நோயாளி இறக்க நேரிடும். சிறுநீரகங்கள் செயலிழக்கும் சமயத்தில் குறிப்பிட்ட நோயாளிக்கு 'டயாலிசிஸ்' சிகிச்சை செய்யப்படும். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து-விட்டால் நோயாளியின் ஒரே ரத்த மாதிரியைக் கொண்டவர்கள் அல்லது குடும்பத்தினரின் பொருத்தமான சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை செய்து எடுத்து பொருத்துகிறார்கள். சில நோயாளிக்கு பொருத்தமான சிறுநீரகம் கிடைப்பது சிரமமாக உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சையில் பல சிக்கல்-களும் ஆபத்தும் உள்ளன. நோயாளி-யின் வாழ்நாளும் வாழ்க்கைத் தரம் மேம்படுவதும் குறைவே. எனவே, இந்த சிக்கல்கள் இல்லாமல் நோயாளியின் உயிரைக் காக்கும் 'மாற்றத்தகுந்த செயற்கை சிறுநீரகத்தை' கண்டுபிடித்து உள்ளோம்.
பயோகம்பேட்டபில் பாலிமர் மெட்டீரியலால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறுநீரகத்தை ஒரு சிறுநீரகமோ, 2 சிறுநீரகங்களுமோ செயலிழந்த நோயாளிக்கு பொருத்திவிட்டால் இயற்கை சிறுநீரகத்தைப் போலவே செயல்படும். அதிகபட்சம் 18 ஆண்டுகள் வரை வெளிப்புற பேட்டரியின் உதவியுடன் இது இயங்கும். இதைப் பொருத்திய பிறகு அடிக்கடி சிகிச்சை செய்யத் தேவையில்லை. டயாலிசிஸ் போல வலி ஏற்படாது, சிகிச்சைக்கு அதிக செலவாகாது. நான் 9-ஆம் வகுப்பு படிக்கும்போது எனது உறவினர் ஒருவர் சிறுநீரகங்கள் செயலிழப்பால் இறந்தார். இதையடுத்து சிறுநீரக நோயாளியை காப்பாற்ற புதிய மருத்துவ சிகிச்சையை கண்டுபிடிக்க வேண்டுமென குறிக்கோள் வைத்து படித்தேன். விடா முயற்சி-யாலும் எங்கள் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் மார்டின் ஜெபராஜ், கோல்கத்தா மருத்துவர் அபிஜித், இந்திய அறிவியல் கழக (அய்அய்எஸ்) விஞ்ஞானி ஏ.ஜி.ராம-கிருஷ்ணன், எய்ம்ஸ் மருத்துவ-மனை மருத்துவர் முகோபாத்யாய உள்ளிட்-டோரின் உதவியாலும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபி.ஜே.அப்துல்கலாம் உள்ளிட்டோரின் ஊக்கத்தாலும் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த முடிந்தது.
உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கபட்டுள்ள இந்த செயற்கை சிறுநீரகத்தை விலங்குக்கு பொருத்தி மருத்துவர்கள் செய்த சோதனை முழு வெற்றி அடைந்துள்ளது. அடுத்த கட்டமாக மத்திய அரசு அனுமதிபெற்று, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மனி-தருக்கு பொருத்தி சோதனை செய்ய வேண்டும். இதுவும் வெற்றி பெற்று-விட்டால் இந்த செயற்கை சிறுநீரகத்தை வர்த்தக ரீதியில் அதிகம் உற்பத்தி செய்து, சிறுநீரக செயலிழப்பு நோயால் அவதிப்பட்டு வரும் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு பொருத்தி அவர்களது உயிரைக் காப்பாற்றலாம் என்றார் அவர். புதாதித்யா தனது கண்டுபிடிப்பு குறித்து ஸ்வீடனில் நடந்த அய்ரோப்பிய சிறுநீரக சங்க மாநாடு உள்ளிட்ட சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். பிரபல ஆக்ஸ்போர்டு என்டிடி மருத்துவ இதழிலும் அவரின் கண்டுபிடிப்பு பிரசுரமாகியுள்ளளது. தனது கண்டுபிடிப்புக்காக சர்வதேச 'பேடன்ட்' எனப்படும் காப்புரிமை பெற்றுள்ள புதாதித்யா, 2012-இல் வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்த செயற்கை சிறுநீரகங்கள் விற்பனைக்கு வரும்; இதற்காக பல்வேறு இந்திய, வெளிநாட்டு நிறுவனத்தார் என்னை அணுகியுள்ளனர் என்றும் கூறுகிறார்.

-அதிரை அமீன், அபூதாபி, ஐக்கிய அரபு அமீரகம்.

------------------------------------------------------------------------------------------------

தாய்ப்பால் அவசியம் ஏன்?

குழந்தைக்கு மிகுந்த ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் தரவல்லதுதான் பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் ஊட்டப்படும் கொலஸ்ட்ரம் எனப்படும் தாய்ப்பால். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்காததால் ஆண்டுக்கு 10 இலட்சம் குழந்தைகள் இறந்து போகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பாக குழந்தைக்கு குளுகோஸ், சர்க்கரை, தண்ணீர் என எதுவும் கொடுக்கக் கூடாது. அதே போல முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலை மட்டுமே உணவாகக் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் குழந்தைக்கு மித மிஞ்சிய அளவில் எதிர்ப்புச் சக்தியை தரவல்லது. அதில் மிகுதியாக உள்ள ஊட்டச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமானது. அதே போல கொலஸ்ட்ரம் கொடுப்பதால் தாய்க்கும் நன்மை உண்டு. முதல் தாய்ப்பால் கொடுப்பதால் பிரசவத்தின் போது ஏற்படுகிற உதிரப்போக்கு கட்டுப் படுத்தப்படுவதோடு, கர்ப்பப்பை சுருங்கவும் வழி வகுக்கிறது. இது சில சமயங்களில் குழந்தை பெற்ற தாய் உதிரப் போக்கால் இறந்து போவதைக் கூட தடுக்கும்.                                     ( நன்றி : விடுதலை)

INTJ திரட்டி

Syndicate content