
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழக கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் இம்மாதம் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் திருச்சியில் அதன் மாநில மாநாடு ஒன்று நடைபெற இருக்கிறது.
அந்த மாநாட்டின் இரண்டாம் நாள் (31.01.10) அமர்வில் "முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் சவால்களும் - தீர்வுகளும்'' எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு ஐஎன்டிஜே நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் முகமாக கடந்த 4-1-10 அன்று ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் எஸ்.என்.சிக்கந்தர் மற்றும் அதன் தலைமை நிர்வாகிகளும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
அவர்களை நம் துணைத் தலைவர் முஹம்மது முனீர், துணை பொதுச் செயலாளர் எஸ்.எம். ஸையத் இக்பால், மாநிலச் செயலார் அபூ ஃபைஸல், தென் சென்னை மாவட்ட பொருளாளர் ஸைய்யது இப்ராஹிம் (ஸேட்டு) ஆகியோர் இன்முகத்துடன் வரவேற்று கலந்துரையாடினார்.


