- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில், கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் உள்ளதாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் முஹம்மது முனீர், தொண்டியப்பா மற்றும் ஃபிர்தவ்ஸ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
தமிழக அரசு கட்டாயப் பதிவு திருமணச் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பது, முஸ்லிம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் பதிவாளரிடம் பதியுமாறும், அவ்வாறு பதியவில்லை யென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.
இது முஸ்லிம் ஜமாஅத்தினைரயும், முஸ்லிம்களையும் களங்கப்படுத்தும் செயலாகும். முஸ்லிம்களுக்காக இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக உள்ளது. இதனால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
பள்ளிவாசல்களில் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுத்தான் நடக்கின்றன. அதையே மீண்டும் பதிவாளரிடம் பதிவு செய்யுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு திருமணத்தை பதிவு செய்யச் சொல்லும் போது, ஒருவர் மரபுப்படி திருமணம் நடக்காமல் பதிவு செய்ய வந்திருப்பதாக தெரிவித்தால், அவர் அத்திருமணத்தை பதிவு செய்ய மறுக்கலாம்.
எனவே, அதற்கான முறையான ஆவணங்களை தம்பதிகள் சமர்ப்பிக்க தவறுகிற போது, சாட்சிகள் உள்பட அனைவர்மீதும குற்ற வழக்குத் தொடர சட்டம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் ஒருவரின் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் அல்லது மறுக்கும் அதிகாரத்தை பதிவாளருக்கு இச்சட்டம் வழி வகை செய்கிறது.
பதிவாளர் விரும்பினால் பதிவு செய்யலாம் அல்லது மறுக்கலாம் எனும் பொழுது அவர் இஸ்லாமியச் சட்டங்களை அறிந்தவராக இருப்பார் என சொல்ல முடியாது. இதனால் முஸ்லிம் ஜமாஅத் அங்கீகாரத்துடன் நடக்கும் திருமணத்தை சந்தேகமாக கருதுவதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது. மேலும் ஜமாஅத்துகளின் கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியாகவும் இது இருக்கிறது.
எனவே, இச்சட்டத்திலுள்ள தவறுகளை நீக்குவதற்காக அனைத்து ஜமாஅத்துக்களையும் ஒன்றிணைத்து மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.
தகவல் : முஸ்லிம்ஹார், தலைவர், இராமநாதபுரம் மாவட்டம்.


