
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பதவிகளைப் போல் அறிவியல் பட்டதாரிகளுக்கு தனியாக அரசு நிருவாகப் பணியிடம் ஒன்றை உருவாக்க வேண்டும், என, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேசினார்.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் 97ஆவது இந்திய அறிவியல் காங்கி-ரஸ் மாநாட்டின் ஒரு-பகுதியாக குழந்தைகள் காங்கிரஸ் மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் துவக்கி வைத்தார். மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 3,500 பள்ளி மாணவர்கள் பங்-கேற்றனர். மாநாட்டில் அப்துல் கலாம் பேசியதாவது:
நான், இஸ்ரோ அமைப்பில் பணியாற்றிய காலத்தில் மூன்று மிகப்-பெரிய விஞ்ஞானிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், பிரம் பிரகாஷ் ஆகிய அந்த மூன்று பேரும் எனக்கு மூன்று முக்கிய விஷயங்களை கற்றுத் தந்தனர். நான் பணி-யாற்றிய காலகட்டங்களில் மாதவன் நாயர் போன்ற இளம் தலைவர்களை உருவாக்கியதை சாதனையாக கருதுகிறேன். இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தனி குறிக்கோள் இருக்க வேண்டும். நிறைய புத்தகங்கள் படிக்க வேண்-டும். சாதனை படைப்பதற்கு தேவையான விஷயங்களை ஆசிரியர்களிடம் இ-ருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார். மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும்போது, அறிவியல் துறை வளர்ச்சி பெறுவதற்கு ஆரம்பக் கல்வியை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். ஆரம்பக் கல்வி பயிலும் போதே மாணவர்களுக்கு அறிவியல் மீது ஆர்வம் வரும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அறிவியல் பட்டதாரிகளுக்கென அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., இருப்பதைப் போல் நிருவாக அளவில் உயர் பணியிடம் உரு-வாக்க வேண்டும்.
மாணவர்கள் வேலை கேட்பவர்களாக வளரக் கூடாது. வேலை உருவாக்குபவர்களாக மாற வேண்டும். 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என கூறுவதில் அர்த்தம் இல்லை. சூரியன் ஆயிரம் கோடி ஆண்டுகள் இயங்-கும் சக்தி படைத்தது. அது 500 கோடி ஆண்டுகள் இயங்கியுள்ளது. இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு இயங்கும் என்றார்.
தகவல் : விடுதலை நாளிதழ்

