இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு அறந்தாங்கியில் காலை 11மணியளவில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் முஹம்மது ஸித்திக் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். ஆரம்பமாக மாநில பேச்சாளர் எம்.முஹம்மது முஹ்யித்தீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளின் ஒழுக்கம் குறித்தும் பேசினார். அடுத்ததாக மாநிலச் செயலாளர் அபூ ஆஸியா தஃவாவின் அவசியம் என்ற தலைப்பில் உறையாற்றினார்.
இறுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் முன்மாதிரியாக கொண்டு செயல்படவேண்டும் என்று உரையாற்றினார். மாநில செயலாளர்கள் செங்கிஸ்கான், இனாயத்துல்லாஹ், ஃபிர்தவ்ஸ், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்
தலைவர் : ஷஃபியுல்லாஹ் 9842618769,
செயலாளர் : செய்யது முஹம்மது 9943213676.
பொருளாளர் : ஷேக் தாவூத் 9894162608


