அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் அல்லாஹ்விற்கே)
வளைகுடாவில் ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை இறையருளால் துவக்கப்பட்டது.
கடந்த 25-12-09 அன்று குவைத் முர்காப் பகுதியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை அமைப்பு துவக்கப்பட்டது. இதில் குவைத் மண்டல நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
மண்டல நிர்வாகிகள் :
தலைவர் : சாதிக் பாஷா (கூனிமேடு),
செயலாளர் :புகாரி (எ) ஹசன் (கடையநல்லூர்),
பொருளாளர் : தாவூத் கனி (ஆலியூர்),
துணைத் தலைவர்: பதுருதீன் (சுல்தான்பேட்டை)
கிளைகள் மற்றும் பொறுப்பாளர்கள் :
ரிக்கா கிளை - ஹாஜா (திருத்துறைப்பூண்டி)
ஸுலைபிகாத் - சாகுல் ஹமீத் (55278386)
பர்வானியா - கே. ஜான் பாஷா
ஸபாநாஸர் - பக்கர் ஷா (67749873)
நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு காட்டித் தந்த வாழிவியல் நெறிமுறைகளின்படி குர்ஆன் - ஹதீஸ் வழியில் நமது வாழ்க்கையை நம்மால் இயன்றவரை தூய்மையான முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் அல்லாத, மாற்று மத சகோதர - சகோதரிகளும் இஸ்லாத்தை அதன் தூய்மையான முறையில் எத்தி வைக்க அழைப்புப் பணியில் அதிக கவனத்துடன் ஈடுபட வேண்டும்.
இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு மாற்றமாக யாருடனும் சமரசமாக செயல்படக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும்.
சமுதாயப் பிரச்சினைகளில் முடிந்தவரை மற்ற சகோதர இயக்கங்களுடன் இணைந்தோ - இணைத்தோ களம் காண வேண்டும். அது சமுதாய ஒற்றுமைக்கும், ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கும் ஓர் முக்கிய அம்சமாக அமையும். (இன்ஷா அல்லாஹ்) போன்ற தீர்மானங்களும் குவைத் மண்டல கட்டமைப்பு நிகழ்ச்சியின் போது நிறைவேற்றப்பட்டது.


