கடந்த 17-12-09 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி நடத்திய கருத்தரங்கத்தில் இன்றைய மாணவர்கள் இஸ்லாமும் என்ற தலைப்பில் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் உரையாற்றினார்,
மாணவர்கள் ஒழுக்கரீதியாகவும், இஸ்லாமிய சிந்தனைகளோடும் ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட வேண்டும். மாணவர் சக்திதான் பல வரலாற்றுகளை மாற்றி எழுதி இருக்கிறது என்றெல்லாம் விரிவான சொற்பொழிவு நடத்தினார்.

அவரைத் தொடர்ந்து மாநில துணைத் தலைவர் முஹம்மது முனீர் ஐ.என்.டி.ஜேவின் சமூகப் பணிகள் குறித்து உரையாற்றினார்.
அவரது உரையில் 20 வருடங்களுக்கு முன் இந்த சமுதாயத்தில் ஒரு சில இளைங்கர்கள் சமுதாய சிந்தனையோடு விழிப்புணர்வோடு முன்னெடுத்த பணிகளின் விளைவுதான் இன்று பல இயக்கங்களாக பிரிவெடுத்து சமுதாய பணிகளில் களம் கண்டு வருவது என குறிப்பிட்டார்.
முன்னதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆற்றிவரும் பணிகள் குறித்து மாநில செயலாளர் செங்கிஸ்கான் பேசினார். மாநில தலைமையகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மாணவரனி ஒருங்கிணைப்பாளர் கலீல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.


